First Rain.
Aye homies, here is my first original Tamil poem :) Translation included.

Disclaimer: I’m not a poet by profession, neither have I been mentored to write well, so I may not be as good (?) as actual poets.
ஆதிமழை
கார்காலப் பெயல்நீர் பொழியும் நேரம்,
புனல் நிரம்பிக் கேணி ஜொலித்ததே!
குமிழ் தவழ நன்னீர் ததும்புமதனை,
அதரம் தேன் சுவைத்ததே!
. . . . . . . . . . . . .
இனிவரும் காலத்தில் கொண்டல் இனிக்கும்
கோடைக் காற்றில் தேகம் குலுங்கும்
இளம் சிட்டுக்கள் கூவும் சந்தங்களால்
செவி குளிருமதனை கேட்க தூண்டும்,
முப்பொழுதுமே!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
கேளுங்கள், இப்புவிக்கு மழையளிக்கும் ஆசி
செவ்வானமே எழிலடையும் அருங்காட்சி
வேளாண்மை சிறக்கும் பொற்காட்சி
விருட்சம் செழிப்படையுமதற்கு
யாழல் சாட்சி— இவற்றை கண்டு பொலிவுறுமோ
அம்புலி வதனம்
இயல்பாக நாணமிடுமோ தாரகைஇன் முகம்
ஆக மானிட வியப்பில் நுதல் விரியும்
உழவன் பாவனைப் புன்னகைத் தவழும்.
ரக்ஷிதா முருகன்.
A very loose translation of my poem is provided below; But it is neither a good translation nor transliteration, because :
I am not a professional translator and lack proper skills.
It’s hard to translate from Tamil to English since the magnitude and beauty of the words are lost in the translation;
English words do not do justice to ancient vocabulary.
First Rain
Tis time for the shower of monsoon waters—O’! the well
Filled with water glistened!
Lips savoured the honey of
its brimming good water!— that embraces
Little bubbles.
. . . . . . . . . . . . . . . . . . . .
In the time henceforth, clouds will sweeten,
Our bodies will delightfully quiver
Upon summer breeze’s caress
Our eardrums will cool upon
The rhythm of Young passerines’ chirps
That will lure our heed all day!
. . . . . . . . . . . . . . .
Listen–to how the rain blessed this Earth (It gifts us)
The surreal sight of pure sky that attains celestial beauty
The golden scene of flourishing husbandry and
Trees’ prosperity that
The white-ants lay witness to.
. . . . . . . . . . . .
Looking at all this,
The radiant moon brightens
The haughty star slips giggles
And finally in his awe, man’s eyebrows widen
The farmer’s face lightens (in happiness)
Hearty thanks 💚